» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காடு அருகே மர்ம காய்ச்சலால் பெண் பரிதாப சாவு

புதன் 15, நவம்பர் 2017 11:51:11 AM (IST)

களக்காடு அருகே மர்ம காய்ச்சலால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

களக்காடு அருகே  கீழபத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அம்மா பொன்னு. இருவரும் கூலி தொழிலாளிகள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மா பொன்னு களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்சல் தீவிரமடைந்தது. இதையடுத்து கடந்த 11-ந் தேதி அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அம்மாபொன்னு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது கணவர் பழனிசாமி கூறும்போது:-அம்மா பொன்னிற்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரை களக்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறி சிகிச்சையளித்தனர். ஆனால் அங்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தோம். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory