» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கந்துவட்டி பிரச்சனை : பாளை., பெண்கள் மீது வழக்கு

புதன் 15, நவம்பர் 2017 12:36:08 PM (IST)

பாளையில் கந்துவட்டி பிரச்சனை தொடர்பாக  2பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளை செந்தில் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பாலசரஸ்வதி (40). இவர் கடந்த 2015ம் ஆண்டு கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் தெருவில் குடியிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி சுப்பு லட்சுமி (45), தங்கபாண்டி மனைவி மல்லிகா (65) ஆகியோர்களிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கினாராம்.

இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். இந்த நிலையில் மேலும் ரூ.78 ஆயிரம் வேண்டும் என்று 2 பெண்களும் அடிக்கடி செந்தில் நகருக்கு சென்று பணம் கேட்டு வந்தனர்.இதுகுறித்து பாலசரஸ்வதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனுவை விசாரித்த பாளை போலீசார் சுப்புலட்சுமி, மல்லிகா ஆகிய 2 பெண்கள் மீதும் கந்துவட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory