» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சை வேதிக் பள்ளியில் வானவில் தினம் கொண்டாட்டம்

திங்கள் 20, நவம்பர் 2017 6:03:56 PM (IST)

தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வானவில் தினம் கொண்டாடப்பட்டது. 

இதில் பள்ளி குழந்தைகள் வானவில்லின் வண்ணமான ஏழு வண்ணங்களில் ஆடைகளை அலங்கரித்துக்கொண்டு வலம் வந்து வானவில்லின் பிரதிபலிப்பை கொண்டுவந்தனர்.  விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி தாளாளர் செந்தில்பிரகாஷ் மற்றும் இயக்குநர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மழலையர்களின வானவில் தோற்றத்தைப்பார்த்து வியந்து கூறுகையில் நமது தட்பவெட்ப நிலைகளில் வானவில் தோன்றுவது ஒருவகை காலத்தை குறிக்கிறது. 

பொதுவாக மழைக்காலங்களில் இது எவ்வாறு தோன்றும் என்ற இயற்பியல் சோதனைகளும் நடத்தப்பட்டு வானவில்லின் வண்ணங்களின் விப்ஜிஆர் வரிசைகளையும் உருவாகும் விதத்தையும் எடுத்துரைத்தார். இதில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory