» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்து உலக சாதனை

திங்கள் 20, நவம்பர் 2017 6:58:07 PM (IST)
நெல்லையில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கெட்டிங் கழகம் ,கடையநல்லூர்  இண்டெர்நேஷனல் பள்ளி இணைந்து உடல் ஆரோக்கி யத்தை வலியுறுத்தி மூன்றரை மணிநேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது.

பாளை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அனைய ஹாக்கி பயிற்சியாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் .சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கெட்டிங் கழக தென்மண்டல அமைப்பாளர் ராம்ராஜ் வரவேற்று பேசினார் , பிரமுகர்கள் சுரேஷ்குமார்,பால்ராஜ்,ஆம்ஸ்ட்ராங் , நாகராஜன்,பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார் .

மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உலக சாதனையாளர் மருந்தாளுனர் சங்கரன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் , தொழில் அதிபர்கள் ராஜகோபால்,ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர் , இதில் சாதனையாளர் முகம்மது ஹபீப் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை பெற்றார்.அசன் அல்தாப் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory