» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பனிரெண்டு நூல்கள் வெளியிட்டு விழா

திங்கள் 20, நவம்பர் 2017 7:37:56 PM (IST)நெல்லையில் ஜானகிராம் ஹோட்டல் அரங்கில் வைத்து காவ்யா பதிப்பகம் சார்பில்,  12 நூல்கள் வெளியிடபட்டது.

கால்கரை வெ. சுடலை முத்துத்தேவரின் 14 வது நினைவு நாள் மற்றும் பேராசிரியர் நா. வானமாமலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவிற்கு பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். டாக்டர்  நடராஜன் வரவேற்று பேசினார். நூல்களை சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா வெளியிட்டார். பேராசிரியர் வானமாமலையின் நான்கு கதைப்பாடல்களை பேராசிரியர் தோத்தாத்திரியும், கட்டபொம்மு கதை பாடல்களை  பேராசிரியர்  இராமச்சந்திரன் பெற்றுகொண்டனர்.

பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரத்தின் அக்னி நாடகத்தினை பேராசிரியர் சிவசுவும், காசு பிள்ளையின் உலகப்பெருமக்கள் தொகுப்பு நூலை கவிஞர் சங்கரும், முதல் விடுதலை வீரர் புலித்தேவன் நூலை பேராசிரியர் வளனரசும் பெற்று  கொண்டனர்.பேராசிரியர் அழகேசனின் இலக்கிய மொழியை பேராசிரியர் சுந்தரமும், பேராசிரியர் பெருமாளின் இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை எனும் நூலை தொல்லியல்  அறிஞர் செந்தீ நடராஜனும், பேராசிரியர்  சித்ராவின் இரத்தினவியல் ஒர் அறிமுகம் நூலை பேராசிரியர் வேலம்மாளும் பெற்று  கொண்டனர்.

பேராசிரியர் ஜெ.பி. ஜோஸபின் பாபாவின் அன்பே பாபா  நாவலை எழுத்தாளர் நாறும்பூ நாதனும், எழுத்தாளர்  நா. நாகராஜனின்  விடியும் வரை பேசலாம் நாவலை தொழிலதிபர்  எட்வர்ட் சாமுவேல்   பெற்று கொண்டனர்.எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நூல்களான நெல்லைக்கோயில்கள் நூலை டாக்டர்பால்ராஜ், சிங்கம்பட்டிஜமீன்கதையை தேசிய நல்லாசிரியர் டாக்டர்  செல்லப்பா ஆகியோர் பெற்று  கொண்டனர்.நெல்லை கூட்டுறவு அங்காடி சேர்மன் பல்லி கோட்டை செல்லப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக உயிரியல் துறை தலைவர் சுதாகரன்,   காஜா முகைதீன், வரலாற்று எழுத்தாளர் திவான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  டாக்டர் முருகேசன்  நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory