» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பதவியை தக்கவைப்பதிலேயே ஈபிஎஸ் அரசு குறியாக உள்ளது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திங்கள் 20, நவம்பர் 2017 8:42:13 PM (IST)பதவியை தக்கவைப்பதில் மட்டுமே ஈபிஎஸ் அரசு குறியாக உள்ளது சுரண்டையில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சுரண்டையில் கலைஞர் அறிவாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது,தமிழகத்தில் விரைவில் உதயசூரியன் உதிக்கும். இந்த ஆட்சிக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 3 மாதம் அல்ல 3 நாட்கள் அல்ல 3 நிமிடங்கள் கூட இந்த ஆட்சி நீடிக்க கூடாது என தமிழக மக்கள் நினைக்கிறார்கள். 

ஜெயலலிதா மறைவிற்க்கு பின்பு பல்வேறு கொடுமைகள் நடக்கின்றன. பதவி ஒன்றேயே குறிக்கோளாக கொண்டு ஈபிஎஸ் அரசு செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மையை இழந்த இந்த அரசு மக்களின் வரிப்பணத்தை பொதுப்பணித்துறையில் ஊழல், நெடுஞ்சாலைத் துறையில் கமிஷன், உள்ளாட்சி துறையில் லஞ்சம் என கோடி கோடியாக கொள்ளையடித்து சம்பாதித்து வருகின்றனர். 

இந்த எழுச்சி மிகு சுற்று பயணததின் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி விரைவில் வரும் என பேசினார். நிகழ்ச்சியில் பெரியசாமி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்பாவு, நெல்லை மேற்க்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன், கீழப்பாவூர் ஓன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory