» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டையில் தேசிய நூலக வாரவிழா : எம்.எல்.ஏ.,முகம்மது அபுபக்கர் பங்கேற்பு

செவ்வாய் 21, நவம்பர் 2017 5:39:40 PM (IST)செங்கோட்டையில் நடந்த 50வது தேசிய நூலக வார விழாவில் எம்.எல்.ஏ., முகம்மது அபுபக்கர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

செங்கோட்டை நூலக கட்டிடத்தில் செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்டம் மற்றும் மேலகரம் எல்கே.சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் 50வது தேசிய நூலக வராவிழா நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் இராம கிருஷ்ணன் தலைமைதாங்கினார். இணைச்செயலாளர் செண்பகக்குற்றாலம் முன்னிலைவகித்தார். தென்காசி நூலகர் கணேசன் வரவேற்று பேசினார். 

நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மதுஅபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் பெற்ற செங்கோட்டை அரசு தலைமை டாக்டர் ராஜேஸ்கண்ணன், எஸ்எம்எஸ்எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பன்னீர்செல்வம், எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, எஸ்எஸ்ஏ.திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சங்கரநாராயணன், விஏஓ.போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற சகுந்தலா, மற்றும் வாசகர் வட்டம் சார்பில் நடந்த நூல் திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் வாசகர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் நூலக வாசகர்வட்ட முன்னாள் துணைத்தலைவர்  ஐயப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குற்றாலிங்கம்மணீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நூலகர் இராமசாமி நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory