» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல்-நெல்லையில் 250 பேர் கைது

செவ்வாய் 21, நவம்பர் 2017 6:11:31 PM (IST)தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.நெல்லையில் நடைபெற்ற  2 மறியல் போராட்டத்தில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
ஓய்வூதியம் ,நிலுவைகள், மருத்துவகாப்பீடு. பழைய பென்சன் திட்டம் போன்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஓய்வூதியம் வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.  அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தி நிலுவைகளை வழங்கவேண்டும்,உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி நிலுவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை விளக்கி  சங்க மாவட்ட பொது செயலாளர் எஸ்.பத்மநாபன்,பொருளாளர் காளத்திநாதன் ,நிர்வாகிகள் அருணாசலம்,நாராயணன்,முனியசாமி, ராஜன் பேசினார் ,மறியலில் ஈடுபட்ட 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் வண்ணார்பேட்டை தாமிரபரணி டெப்போ முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார், அரசு போக்குவரத்து கழக  தொழிலாளர் சங்க  பொது செயலாளர் ஜோதி , பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி கோபாலன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர் .நிர்வாகிகள் ராமையாபாண்டியன்,முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் எட்டப்பன் ,பழனி, தங்கராஜ்முத்து கிருஷ்ணன், மகாராஜன், முத்தையா , தங்கமாரி ,தாஸ், செல்வம், பெருமாள்சா மி உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  121 பேர் கைது செய்யப்பட்டனர்.2 இடங்களில் நடைபெற்ற ,மறியல் போராட்டத்தில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory