» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே பள்ளி மாணவி துாக்கு போட்டு தற்கொலை

செவ்வாய் 21, நவம்பர் 2017 8:52:46 PM (IST)

கடையத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் பவித்ரா (17). இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பவித்ராவின் தந்தையும், தாயும் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர்.இதனால் பவித்ராவை அவரது தாத்தா ராஜா (70) பராமரித்து வளர்த்து வந்தார். 

இந்த நிலையில் பவித்ரா தன்னுடன் படித்த ஆண் நண்பர்களுடன் பேசி பழகி உள்ளார். இதற்கு அவரது தாத்தா ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து பவித்ராவை கண்டித்தார்.இதில் மனவேதனை அடைந்த பவித்ரா நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory