» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
புதன் 6, டிசம்பர் 2017 12:04:04 PM (IST)

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், 25ஆண்டு கால வழக்கிற்கு நீதி கோரியும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ராஜாஜி பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சாஹூல் ஹமீது கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், அருட்பணியாளர் சுந்தரி மைந்தன், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பார் புதுக்குடி ராஜா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பாசுல் சமீர், எஸ்டிஐ மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, மாவட்ட துணைத் தலைவர் முகம்மது அலி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுபோல், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் காமராஜ் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேட்டை முஸ்தபா கன்டன உரையாற்றினார். தமிழ் புலிகள் கத்தார் பாலு, மற்றும் கட்சி நிர்வாகிகள் முகம்மது ரெளபிக், முகம்மது ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டையில் கல்லூரி மாணவிமாயம் : போலீஸ் தேடல்
சனி 23, பிப்ரவரி 2019 8:30:23 PM (IST)

குற்றாலம் மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் ?
சனி 23, பிப்ரவரி 2019 8:16:51 PM (IST)

சிலம்பு ரயில் வாரத்திற்கு மும்முறை இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 7:14:59 PM (IST)

வெடி விபத்தில் மரணம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
சனி 23, பிப்ரவரி 2019 6:54:33 PM (IST)

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் : குடிநீர் வடிகால் வாரிய சங்கம் வலியுறுத்தல்
சனி 23, பிப்ரவரி 2019 6:02:39 PM (IST)

நகைமதீப்பீட்டாளர்களை வங்கி ஊழியராக்க கோரி சி. ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்
சனி 23, பிப்ரவரி 2019 5:44:34 PM (IST)

spmaDec 6, 2017 - 05:32:05 PM | Posted IP 210.1*****