» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றிய தமிழக ஆளுனர்

புதன் 6, டிசம்பர் 2017 5:53:37 PM (IST)திருப்பூர் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றினார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அண்மையில் நியமிக்கப்பட்டார்.  கோவையில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற கையோடு மாவட்ட நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு போய் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார் புரோகித். இதுவும் சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புரோகித் பங்கேற்றார். அத்துடன் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய பகுதியில் குப்பைகளை அகற்றினார். ஆளுநருடன் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் கலந்து கொண்டார். இந்த விவகாரமும் சர்ச்சையாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory