» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களுக்கு வழங்க ஆர்ப்பாட்டம்

புதன் 6, டிசம்பர் 2017 7:43:34 PM (IST)

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நெல்லையில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

டிசம்பர் 6 ம் தேதி டெல்லியிலுள்ள புகழ் பெற்ற பாபர்மசூதி இடிக்கப்பட்டது.அதன் நினைவு தினத்தை ஒட்டி மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். மசூதி இடிப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory