» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வங்கி ஊழியர் வீட்டில் ஐம்பது பவுன் நகை கொள்ளை

புதன் 6, டிசம்பர் 2017 7:55:04 PM (IST)

திருநெல்வேலியில் வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே ராஜராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் சிவசாமி. ஸ்டேட் பாங்கில் கேஷியராக பணியாற்றுகிறார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவசாமி வெளியூர்  சென்று விட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.இதுகுறித்து பாளை பெருமாள்புரம் குற்றப்பிரிவு  போலீசார்  தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory