» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் : தென்காசியில் வைகோ பேட்டி

வியாழன் 7, டிசம்பர் 2017 10:21:43 AM (IST)

ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும் என தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி வருகை தந்தார். அவருக்கு நகர மதிமுக சார்பில் வெங்கடேஸ்வரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வைகோ தென்காசி நகர மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு கேடுகளையும், தமிழக மக்களுக்கு துரோகத்தையும் செய்து வருகிறது.இதனை தட்டிகேட்கவும், தடுத்து நிறுத்தவும் முதுகெலும்பு இல்லாத அரசாக உள்ளது.ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன், அங்கு மீனவர்கள் வீடுகளில் அழுகையும், கதறலும் தான் கேட்கிறது.

நமது தமிழக மீனவர்கள் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநில கடலில் கரை ஏற முயன்றுள்ளார்கள். அவர்களை அங்குள்ளவர்கள் கரை ஏற விடாமல் தடுத்துள்ளார்கள். மத்திய அரசு காணாமல் போன மீனவர்களை மீட்க எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைவிட கொடுமை காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.நேற்று கன்னியாகுமரியில் நான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது அவர்கள் என்னிடம் 482 விசைப்படகுகள், 82 நாட்டுப்படகுகள், மற்றும் 2100 மீனவர்களையும் காணவில்லை என ஆதாரங்களுடன் கூறினார்கள். அவர்களின் நில என்ன ஆனது என்று தெரியவில்லை. இது பற்றி மத்திய மாநில அரசுகள் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை. 

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது. மேலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசு கடமை தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 30  லட்சம் வழங்க வேண்டும். மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்க வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 11 ம் தேதி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசுவேன். மத்திய மாநில அரசுகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், எவ்வளவு தில்லுமுல்லகள் செய்தாலும் மக்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க.அமோக வெற்றி பெறும் என்றார். 

பேட்டியின் போது; மதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் திமு.ராஜேந்திரன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், தென்காசி நகர மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொருளாளர் இராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன், சுரண்டை பேரூர் மதிமுக செயலாளர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் முகம்மது இஸ்மாயில், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் இராஜபாண்டி ஆறுமுகச்சாமி, சங்கரமூர்தியா பிள்ளை, பிச்சுமணி, கீழப்புலியூர் மூக்காண்டி, நாராயணன், ஆசாத்நகர் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory