» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் மருந்துக்கடையில் ஊசி போட்ட விவசாயி சாவு

வியாழன் 7, டிசம்பர் 2017 12:01:09 PM (IST)

தனியார் மருந்துக்கடையில் ஊசி போட்டதில் விவசாயி மரணமடைந்தார். இது குறித்து மருந்துகடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் ( 55) விவசாயி. இவர் சம்பவத்தன்று சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு தலை வலிக்காக ஊசி போட சென்றார்.
ஊசி போட்ட பின்பு சிறிது நேரத்தில் முருகேசனுக்கு வலிப்புநோய் வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மருந்துகடை உரிமையாளர் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory