» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேட்டையில் மெகா டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்

வியாழன் 7, டிசம்பர் 2017 1:12:01 PM (IST)திருநெல்வேலி  மாவட்டம்,  பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று அதிகாலையில் வீடு, வீடாக நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அங்கு நீண்ட நாட்களாக பூட்டப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வீடுகளை திறந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து, வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டுகிறதா என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியாளர்களிடம் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிகளை மிகுந்த கவனத்துடன் சிறப்பாக பணியாற்ற வேண்டுமெனவும், டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அனைத்து வீடுகளிலும் அடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.ஆய்வின் போது,மாநகராட்சி ஆணையாளர் (போ) நாராயணநாயர் மாநகர நல அலுவலர் வட்டாட்சியர் கணேசன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory