» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

வியாழன் 7, டிசம்பர் 2017 1:31:48 PM (IST)

நெல்லையில் டெங்குக் காய்ச்சல் பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து அந்தப் பகுதியில் டெங்குக் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி சி.என்.கிராமம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் சுதா (22) டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் இன்று லட்சுமிபுரம் பகுதி மக்கள் தமிழர் விடுதலை கள மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர செயலாளர் மணிபாண்டியன் முன்னிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory