» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வரும் 10ஆம் தேதி கந்துவட்டி பொதுவிசாரணை : கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் தகவல்

வியாழன் 7, டிசம்பர் 2017 5:46:13 PM (IST)

கந்துவட்டி தொடர்பாக வந்த புகாரை ஒட்டி நெல்லையில் வரும் 10ஆம் தேதி பொது விசாரணை நடைபெறுகிறது என நெல்லையில் கந்து வட்டி ஒழிப்பு கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கந்து வட்டி ஒழிப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும் சி.பி.எம் மாவட்ட செயலாளருமான கே.ஜி.பாஸ்கரன் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது-கந்துவட்டி கொடுமையால் கடந்த அக் 23 ஆம் தேதி காசித்தர்மத்தை சேர்ந்த இசக்கி முத்து,அவரது மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர் ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர வைத்த சம்பவம் இது .

கந்துவட்டி தடை சட்டம் -2003 ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு அரசியல் கட்சிகள் ,மக்கள் இயக்கங்கள் ,மனித உரிமை அமைப்புகள் இணைந்து கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி செயற்பட்டு வருகின்றன.நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு இதுவரை 139 கந்துவட்டி புகார்கள் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. கந்து வட்டி ஒழிப்பு கூட்டியக்கத்திற்கு இதுவரை 104 புகார்கள் வந்துள்ளன 

இந்த புகார்கள் குறித்து வரும் 10ஆம் தேதி ஞாயிறன்று பாளை சமாதானபுரத்தில் உள்ள ஏ.டி.எம்.எஸ் ஹாலில் பொது விசாரணை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது .இந்த பொது விசாரணையில் மாவட்டத்தில் இருந்து பல பகுதி மக்கள் நீதி வேண்டி கொடுத்துள்ள மனுக்கள் அடிப்படையில் மீதான விசாரணை நடைபெறும் ,பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் வழங்கிய மனுக்கள் அடிப்படையில் கந்துவட்டி காரர்களுக்கும் வழக்குகள் சம்பவங்கள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கும் நடுவர்குழு சரபில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பொது விசாரணை நடுவர்குழுவிற்கு மும்பை உயர்நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி பி.ஜி.ஹோல்சே பட்டேல் தலைமை தாங்குகிறார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக்தின் முன்னாள் துணை வேந்தரும் மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான வசந்தி தேவி ,பேராசிரியர் ஜவாஹிருல்லா, திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி,மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்,பேராசிரியர் பால் நியூமன் ,நீதிக்கான தேசிய தலித் இயக்க செயலாளர் ரமேஷ் நாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன்,மூத்த பத்திரிக்கையாளர் மெய்யம்மை ,உயநீதிமன்ற வழக்கறிஞர் அலாவுதீன் , பேராசிரியர் பியூலா சேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரசுகளுக்கு பரிந்துரைகளை வைப்பர் . 

நியாயப்படி பார்த்தால் அரசே பொது விசாரணை வைத்திருக்க வேண்டும் கந்துவட்டி பிரச்சினையை பொறுத்தவரை அரசு மந்த கதியில் செயல்படுகிறது கந்துவத்தை பிரச்சினைகள் சீரியஸாக எடுத்து கொள்ளப்படவில்லை ,இந்த பொது விசாரணை மூலம் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்பதை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் .இந்த கந்துவட்டியை கார்டூனாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவும் எங்களிடம் புகார் கொடுத்துள்ளார் .இந்த பொது விசாரணையில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் இவ்வாறு கே.ஜி.பாஸ்கரன் கூறினார்.பேட்டியின் போது  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன்,கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்க நிர்வாகிகள் உஸ்மான் கான்,வான்முகில் பிரிட்டோ,முபாரக்,ஜப்பார் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory