» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்டம் நடக்கும் பகுதிகள்

வியாழன் 7, டிசம்பர் 2017 6:10:52 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:– இந்த வாரத்துக்கான அம்மா திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் வருமாறு:– நெல்லை வட்டம்– வேளார்குளம், ராதாபுரம் வட்டம்–வேப்பிலான்குளம்-1, அம்பை வட்டம்– மேல அம்பாசமுத்திரம் , நாங்குநேரி வட்டம்– கீழக்கருவேலன்குளம், சேரன்மாதேவி வட்டம்– கீழப்பாவுர்-2 , பாளையங்கோட்டை வட்டம்– பாளையஞ்செட்டிகுளம், மானூர் வட்டம்– பந்தபுளி, சங்கரன்கோவில் வட்டம்– மதுராபுரி அ.மதுராபுரி மேற்கண்ட கிராமங்களில் முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள் உள்ளி ட்டவை கேட்டு விண்ணப்பம் செய்யலாம். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் தகுந்த ஆவணங்களுடன் சென்று கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory