» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் கருவாடு விலை கிடுகிடு உயர்வு

வியாழன் 7, டிசம்பர் 2017 6:34:27 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் கருவாடு விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

ஒக்கி புயல் காரணமாக நெல்லை, மாவட்ட மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே திசையன்விளை மீன்மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து மீன் பிரியர்கள் கருவாடு பக்கம் திரும்யுள்ளனர். இதனால் கருவாடு விலை ஒரே வாரத்தில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 

சென்ற வாரம் சாளை ரக கருவாடு ரூ.10-க்கு 10 விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.10-க்கு சாளை ரக கருவாடு 4 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் சென்ற வாரம் 100 சாளை ரக கருவாடு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory