» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா

வியாழன் 7, டிசம்பர் 2017 6:52:30 PM (IST)பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

1-04-2003க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களும் பழைய ஓய்வுதிய திட்டத்தில் இணைத்து பென்சன் வழங்க வேண்டும்,ஒய்வு பெற்றவர்கள் பணபலன்களை நிலுவையின்றி வழங்க வேண்டும்.13ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச ஊதியம் 18ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.240 நாட்கள் பணிமுடித்தவர்களை நிபந்தனையின்றி ஒப்பந்தப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,காலம் கடத்தாமல் உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் கீழ் தர்ணா போராட்டம் நடைபெற்றது .

போராட்டத்திற்கு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க தொமுச மாநில துணை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார் , சி.ஐ.டி.யு விரைவு போக்குவரத்து கழக சங்க துணை பொது செயலாளர் சுதர்சிங் முன்னிலை வகித்தார் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சம்மேளன சி.ஐ.டி.யு உதவி செயலாளர் காமராஜ் ,ஒய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் பத்மநாபன்,சங்க மாவட்ட தலைவர் சேதுராமலிங்கம்,ஏ.ஐ.டி.யு சி. பொது செயலாளர் சக்கரபாண்டி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.தர்ணா போராட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் முருகேசன்,செயலாளர் அருண்,பொருளாளர் மந்திர மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ,விரைவு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory