» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் விழா

வியாழன் 7, டிசம்பர் 2017 8:34:40 PM (IST)திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் படைவீரர் கொடி நாள் விழா .இன்று (07.12.2017) நடைபெற்றது. 

விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 35 முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோர்களுக்கு ரூ.5,57,435 மதிப்பிலான நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கினார்.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:முப்படைகளையும் சார்ந்த வீரர்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பிற்கும் இயற்கை சிற்றங்களால் ஏற்படும்  இன்னல்களில் இருந்து மக்களைகாப்பதிலும் உள்நாட்டு பாதுகாப்பிலும் ஆற்றி வரும் சேவை மகத்தானதாகும்.இவர்கள் சேவையை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 7ம் நாள் படை வீரர் கொடிநாள் கொண்டாடப்படுகிறது.முன்னாள் படைவீரர் நலத்திற்க்காவும் அவர்களின் குடும்பத்தினர் நலத்திற்காகவும் கொடிநாள் நிதி வசூல் செயய்ப்படுகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதிக்கு அரசு ரூ.49,22,500  இலக்கு நிர்ணயிக்கபட்டது. இலக்கையும் மிஞ்சும் வகையில் ரூ.94,80,000 வசூலிக்கப்பட்டு குறியீடு இலக்கு 192.58 விழுக்காடு எய்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.5,28,000 வசூலிக்கப்ப ட்டுள்ளது. 2016ம் ஆண்டில் 972 முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை  சார்ந்தோர்க்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நிதி உதவிகள் வழங்கப்ப ட்டுள்ளது. 

திருநெல்வேலி  மாவட்டத்தில்  முன்னாள் படைவீரர்களுக்கு தனியாக குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்;தப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. அலுவலர்கள் பணியாற்றி வரும் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளை தனி கவனத்துடன் பரிசீலித்து விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory