» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் பிரபல பழக்கடை வியாபாரி வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை

செவ்வாய் 12, டிசம்பர் 2017 6:11:19 PM (IST)

நெல்லை பழக்கடை வியாபாரி வீட்டில் 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி ஜங்ஷனை சேர்ந்த பிரபல பழக்கடை உரிமையாளர் செல்லப்பா. இவரது பெயரில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பழக்கடைகள் உள்ளன. இவரது மகன் தங்கதுரை. இந்நிலையில் இன்று பகலில் தங்கதுரையின் மனைவி காந்தி (30) வீட்டில் இருந்த போது உள்ளே அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் காந்தியை கயிறால் கட்டி போட்டு 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் வந்துள்ளது .

வீட்டில் பெரிய சத்தம் கேட்டு தங்கதுரையின் சகோதரி மகேஸ்வரி வீட்டு மாடியில் இருந்து கதவை திறந்து வந்து கீழே பார்த்த போது தான் நடந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் காயத்துடன் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ள னர் சந்திப்பு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory