» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் வீடு புகுந்து 28 பவுன் நகை திருட்டு : சேலம் மாவட்ட கொள்ளையன் கைது

திங்கள் 1, ஜனவரி 2018 12:52:50 PM (IST)தென்காசியில் வீடு புகுந்து 28 பவுன் தங்க நகைகளை திருடிய சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மேலகொயிக்கால் தெருவை சேர்ந்த செய்யது என்பவரின் மகன் ராஜா (29). இவர் தென்காசி புதிய பஸ்நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்ல பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் பையில் இருந்த மணிபர்சை யாரோ ஒரு ஆசாமி திருடியுள்ளான்.இதைப்பார்த்து ராஜா கூச்சலிட்டார். அந்த நேரத்தில் ஒருவன் பர்சுடன் தப்பி ஓட முயன்றுள்ளான். அப்போது மற்ற பயணிகள் அந்த திருடனை மடக்கி பிடித்தனர் உடனடியாக தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தென்காசி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த திருடனை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அந்த திருடன் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (39) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கடந்த 2015 ம் ஆண்டு தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மனைவி மீனாகுமாரியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த 28 பவுன் தங்கநகைகளை கொள்ளை அடித்தாக ஒப்புக்கொண்டான். உடனடியாக அவன் கொடுத்த தகவலின் படி 28 பவுன் தங்கநகைகளை போலீசார் மீட்டனர். அதன்பின் செந்தில்குமாரை போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தினர். நீதிபதி அந்நபரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory