» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னை- திருநெல்வேலி, திருநெல்வேலி -சென்னைக்கு 13 சிறப்பு ரயில்கள் ஜனவரியில் இயக்கம்

புதன் 3, ஜனவரி 2018 7:54:36 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மதுரை வழியே 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ஜனவரி 5 மற்றும் 9 தேதிகளில் சென்னை எக்மோரில் இருந்து இரவு 9.50 மணிக்கு கிளம்பும் ரயிலானது மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.சென்னை திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 11 மற்றும் 13 தேதிகளில் சென்னை எக்மோரில் இருந்து இரவு 9.50 மணிக்கு கிளம்பும் ரயிலானது மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். அது போல் ஜனவரி 16 ம் தேதி மாலை 6.25 மணிக்கு கிளம்பும் சுவிதா ரயில் மறுநாள் காலை 5.35 க்கு சென்னையை வந்தடையும்.

ஜனவரி 12 ம் தேதி இரவு சென்னை எக்மோரில் இருந்து இரவு 9.50 மணிக்கு கிளம்பும் சுவிதா ரயிலானது மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வே லியை வந்தடையும். ஜனவரி 28 ம் தேதி மதியம் 3 மணிக்கு திருநெல்வே லியிலிருந்து சென்னைக்கு சுவிதா ரயில் செல்கிறது.அது போல் ஜனவரி 16 ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து இரவு 9.50 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். ஜன 25 ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து இரவு 9.50 மணிக்கு கிளம்பும் சுவிதா ரயிலானது மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.திருநெல்வேலி சென்னை இடையே ஜன 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாலை 6.25 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 5.35 க்கு சென்னையை வந்தடையும்.

அது போல் திருநெல்வேலி சென்னை இடையே சிறப்பு கட்டண ரயில் ஜனவரி 12 ம் தேதி மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் நாளை (4 ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என அறிவிக்க ப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory