» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டையில் கிரனைட் கற்கள் திருடியவர் கைது

வெள்ளி 12, ஜனவரி 2018 1:00:00 PM (IST)

செங்கோட்டையில் கிரானைட் தளக்கற்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி (32). இவர் வீடு கட்டுவதற்காக 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் தளக்கற்களை வாங்கி வீட்டின் முன் வைத்திருந்துள்ளார். இதில் 23 பெட்டிகளில் இருந்த கிரானைட் தளக் கற்களை இதே தெருவைச் சேர்ந்த சாகுல்கமீது மகன் அல்லாபிச்சை (36) என்பவர் திருடிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து செங்கோட்டை காவல் நிலையத்தில் பாக்கியலெட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அல்லாப்பிச்சையை கைது செய்து அவரிடமிருந்து 23 பெட்டிகள் கிரானைட் தளக்கற்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory