» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

வெள்ளி 12, ஜனவரி 2018 1:19:45 PM (IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி இன்று (12.01.2018) நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்பிரபாகரன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முன்னிலையில் தண்ணீரினை திறந்து வைத்தார்.பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது- தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் பாசன பரப்பு ஆயக்கட்டான மடத்துக்கால், நான்குநேரியன் கால்வாய் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே அமைந்துள்ள முதல் ஐந்து அணைக்கட்டுகள் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 9592.91 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் 31.03.2018 முடிய, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் 2017-2018ம் ஆண்டு பிசான சாகுபடிக்கு நீர் இருப்பினை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

வடக்குபச்சையாறு நீர்தேக்கத்தின் மூலம் பத்தை, மஞ்சுவிளை, களக்காடு, பத்மநேரி, வடமலைசமுத்திரம், சூரன்குடி, கடம்போடுவாழ்வு, நான்குநேரி, கரந்தாநேரி, மறுகால்குறிச்சி, பட்டர்புரம், இறைப்புவாரி, பரப்பாடி, விஜயநாராயணம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில்  நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்தில் எதிர்வரும் நாட்களில் பருவ மழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையெனில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும்.  எனவே, பொதுமக்கள், விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோகப் பணியில் பொதுப்பணித் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், பொதுப்பணித் துறை சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜெயபாலன், உதவி செயற்பொறியாளர் மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், முர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, நாங்குநேரி வட்டாட்சியர் ஆதிநாராயணன், மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory