» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கல் கொண்டாடிட ஸ்ரீவைகுண்டம் அனை தயார் : ஆட்சியர் வெங்கடேஷ் ஆய்வு

வெள்ளி 12, ஜனவரி 2018 3:30:25 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ்,உத்தரவின் பேரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் அணையின் சுற்றுப்புற பகுதி தூய்மைபடுத்தப்பட்டு, பொது மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றையும், அதன் சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மைபடுத்த, துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ்உத்தவிட்டார். அதன்படி  சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 2½ சதுர கிலோ மீட்டர் தூரம் வரையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் பங்கான பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதை, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள், பொதுப்பணித் துறையினருடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொண்டு, ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதிகளில் தேங்கி இருந்த அமலைச்செடிகளை முற்றிலுமாக அகற்றினார்கள். 

மேலும், அணையின் கீழ் பகுதியில் பழைய பாலத்திலிருந்து புது பாலம் வரையிலும் அடர்ந்து, வளர்ந்து இருந்த கருவேலமரங்களை அகற்றி அந்த பகுதி முழுவதுமாக சுத்தப்படுத்தி, அப்பகுதியைச் சார்ந்த சுற்றுவட்டார பொது மக்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகியவற்றை குடும்பத்தினருடன் வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஸ்ரீவைகுண்டம் அணை பகுதிகளில் அகற்றப்பட்டுள்ள கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றியுள்ள கிராமமக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அணைப்பகுதி சுற்றியுள்ள இடங்களில் சிறுவர், சிறுமியர்கள் காணும் பொங்கல் தினத்தன்று விளையாடி மகிழும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், தெரிவித்தார். மேலும், பொது மக்கள் அணைப்பகதுpயில் படகுசவாரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். ஆய்வின் போது, சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரகுநாதன், சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

நிர்மல்Jan 12, 2018 - 04:05:25 PM | Posted IP 122.1*****

மீண்டும் குப்பை ஹினால் அபராதம் என்ற அறிவிப்போடு கண்காணிக்கும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் .மரங்களை நட உத்திரவு போட வேண்டும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory