» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவர் பரிதாப சாவு : சுரண்டை அருகே சோகம்

வெள்ளி 12, ஜனவரி 2018 6:02:54 PM (IST)

சுரண்டை அருகே டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள தாயார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குட்டி மகன் ராமகிருஷ்ணன்(17). இவர் பங்களாச்சுரண்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 8ஆம் தேதி மாலையில் காய்ச்சல் கூடியதால் இவருக்கு வலிப்பு ஏற்பட்டதாம். உடனடியாக அவரை சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகி ச்சை அளித்த பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக  பாளை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலையில் அவர் இறந்தார்.

தாயார்தோப்பு கிராமத்தில் பரவலாக மர்மக் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம் அமைக்கவும், நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory