» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிமுகவிலிருந்த புற்று நோய்கள் சசிகலா தினகரன் நீக்கம் : சுதா பரமசிவம் பாராட்டு

வெள்ளி 12, ஜனவரி 2018 6:11:18 PM (IST)அதிமுகவிலிருந்த புற்றுநோய்கள் சசிகலா, தினகரன்நீக்கப்பட்டதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகர்மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 101வது பிறந்தநாள்ஆலோசனைக் கூட்டம் மாநகர்மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமையில்மாநகர் மாவட்ட கழகப் பொருளாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் சுதாபரமசிவம் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது அதிமுக என்ற அமைப்பை எந்தகொம்பனாலும் ஆட்டவோ அகற்றவோ முடியாது என்றும்அதிமுகவிலிருந்த புற்று நோய்களான சசிகலா மற்றும டிடிவி தினகரனை நீக்கியதன்மூலம் கழகம் சிறப்புடன் இருப்பதாகவும், இந்த இயக்கம் மறைந்த தலைவர்எம்.ஜி.ஆரால் தொடங்கப்ப ட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்வளர்க்கப்பட்டது. 

இந்த இயக்கத்தை நசுக்க கருணாநிதி எவ்வளவோ முயன்றும்ந டைபெறவில்லை. தற்போது ஸ்டாலினாலோ, சசிகலா டிடிவி தினகரனலோ ஒன்றும்அசைக்க முடியாது. அம்மாவின் ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகள் அல்ல எத்தனைஆண்டுகளானாலும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும் என்றார்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.எம்.ஜி.ஆரின் 101வது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நெல்லைமாநகரில் உள்ள 55 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர் படத்தை அலங்கரித்துஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது, சென்னையில் நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர்நூற்றாண்டு நிறைவு விழாவில் நெல்லை மாநகரில் இருந்து பெருந்திரளாக கலந்துகொள்வது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையினை நெல்லை தெற்குபுறவழிச்சாலை சந்திப்பு மேலப்பாளையம்-குலவணிகர்புரம் இடத்தில் அமைப்பது.

தமிழ்நாடு என பெயர் சூட்டி ஐம்பதாவது ஆண்டினை முன்னிட்டு பொன்விழாவாகஅறிவித்ததோடு இந்த விழாவினை சிறப்பாக கொண்டாடுவது என்று சட்டப்பேரவையில்அறிவித்த முதல்;வர், துணை முதல்வர்; ஆகியோருக்கு நன்றிதெரிவிக்கப்பட்டது, பொங்கல் திருநாளை யொட்டி ஜெயலலிதா அரசின் சாதனை தொடர்ச்சியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா சர்க்கரைபொங்கல் பொருட்களை வழங்க உத்தரவிட்ட முதல்வர், துணைமுதல்வர் ஆகியோ ருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்றவற்றில்தலைவர் பதவியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில்அறிவித்த முதல்வர் துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இரட்டை இலையை மீட்டுத் தந்த கட்சியின் ஓருங்கிணைப்பாளர்ஓ .பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிதெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பகுதிச் செயலாளர்கள் மாதவன, மோகன், கிருஷ்ணமூர்த்தி, ஹயாத்,சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்வி. திருமலை யப்பன், வேல்பாண்டி, வெள்ளப்பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் படப்பைசுந்தரம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory