» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாரண, சாரணியர் இயக்க ஆயத்தப் பயிற்சி முகாம்

வெள்ளி 12, ஜனவரி 2018 7:50:21 PM (IST)தென்காசியில் சாரண, சாரணியர் இயக்க இராஜ்யபுர~;கார் விருதுக்கான இரண்டாம் ஆயத்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி பாரத சாரண, சாரணியர் இயக்க இராஜ்ய புரஷ்கார் விருதுக்கான இரண்டாம் ஆயத்தப் பயிற்சி முகாம் குத்துக்கல்வலசை செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. காமிற்கு தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் ரதிபாய் தலைமை வகித்தார். சாரண, சாரணியர் இயக்க மாவட்ட ஆணையர்கள் இவாஞ்சலின் டேவிட், திவான் பக்கீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் நேருராஜா வரவேற்றுப் பேசினார்.

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் திருமலை சிறப்புரையாற்றினார். மாவட்ட பயிற்சி ஆணையர்கள் பொன்ன ம்மாள், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருள்பாண்டியன் வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சிகளை மாவட்ட அமைப்பு ஆணையர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.  முகாமில் தென்காசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளின் 500 சாரண, சாரணியர்கள்  பயிற்சி பெற்றனர். முடிவில் நிர்வாகக் குழு உறுப்பினர் திவான் மைதீன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory