» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - திருச்செந்துார் ரயில் மோதி ஒருவர் சாவு

வெள்ளி 12, ஜனவரி 2018 8:06:07 PM (IST)

நாசரேத் அருகே ரயில் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாசரேத் அருகே உள்ள கீழ வெள்ள மடத்தை சேர்ந்தவர் சாந்தசீலன் (வயது 51) கூலித் தொழிலாளியான இவர் நாசரேத் பஸ் நிலையம் பின்புறம் ரெயில் தண்டவாளம் அருகே நடந்து கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சாந்தசீலன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory