» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்பு

சனி 13, ஜனவரி 2018 10:08:47 AM (IST)தென்காசி கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி முதன்மை சார்பு நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி திரிவேணி ஆகியோர் தலைமை வகித்தனர். கரும்பு, மஞ்சள், பழங்கள் படையல் செய்து பொங்கலிடப்பட்டது. 

பொங்கல் பொங்கிய போது கூடி நின்றவர்கள் பொங்கலோ, பொங்கல் என கூறி மகிழ்ந்தனர். பொங்கல், கரும்பு, பழங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பார் அசோசியேசன் தலைவர் செல்லத்துரை பாண்டியன், செயலாளர் மாரியப்பன். துணைச் செயலாளர் சக்தி சூரியன், பொருளாளர் இராமச்சந்திரன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் பாண்டியராஜ், செயலாளர் புகழேந்தி, துணைத் தலைவர் தாஹிராபேகம், துணைச் செயலாளர் ராஜன் ஆசீர்வாதம், அரசு வக்கீல் கார்த்திக் குமார், வக்கீல்கள் அப்துல் மஜீத், கைலாசம், வெங்கடே~;, நவநீதகிருஷ்ண கண்ணன், ஜெபா, வனஜா, கௌரி, கனிமொழி, ஜான்சி, மணிகலா, முத்துச்செல்வி, ராணி, இசக்கியம்மாள், மரகதம், பொன்மாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory