» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக்கில் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து பெண் பலி: 4 பேர் படுகாயம்

சனி 13, ஜனவரி 2018 12:09:58 PM (IST)

தென்காசி அருகே பைக்கில் மோதிய ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அம்மணி (எ) மாரியம்மாள் ( 55). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(50), ஐயப்பன் (60), மற்றொரு மாரியம்மாள் (38), ஜெயசீலன் ஆகியோரும் தென்காசி அருகேயுள்ள புல்லுக்காட்டுவலசை கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் கடையநல்லூருக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோ தென்காசியை கடந்து இலத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது அவ்வழியே வந்த பைக் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த அம்மணி (எ) மாரியம்மாள் அதே இடத்தில் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த இலத்தூர் போலீசார் விரைந்து சென்று படுகாயம டைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். மேலும் அம்மணி (எ) மாரியம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் பற்றி இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory