» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்துமுன்னணி கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் முயற்சி – வாக்குவாதம் பரபரப்பு

சனி 13, ஜனவரி 2018 12:25:50 PM (IST)

செங்கோட்டையில் இந்து முன்னணி கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற போலீசாருடன் இந்து முன்னணியினர்; வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செங்கோட்டை நகர தலைவர் வர்மா தங்கராஜ் தலைமை தாங்கினார். பா.ஜ.க. நகரத் தலைவர் மாரியப்பன் செயலாளர் சீனிவாசன், சிவா, காளிராஜ், கார்த்திக், சுரேஷ், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பா.ஜ.க. வழக்கறிஞர் சாக்கரட்டீஸ் சிறப்புரை யாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுவாமி ராகவானந்தா, டாக்டர் ராஜேஷ்க ண்ணா, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் மாசானம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் செங்கோட்டை  நகரின் முக்கிய வீதிகளில் இந்து முன்னணி கொடியேற்றப்பட்டது. விழாவினை முன்னிட்டு செங்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே உள்ள இந்து முன்னணி கொடிக்கம்பத்திலும் கொடியேற்ற முடிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் செங்கோட்டை போலீசார் நகராட்சி பணியாளர்களின் மூலமாக அந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதை அறிந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் திரண்டு வந்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் இந்த கொடிக்கம்பம் அமைக்க முறைப்படி அனுமதி பெறவில்லை எனவே சட்டப்படி இதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் இந்து முன்னணி கொடிக்கம்பம் அமைக்க முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறினர். ஆனாலும் போலீசார் அதனை ஏற்க மறுத்தனர். உடனடியாக இந்து முன்னணியினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  காவல்துறையின் அனுமதி பெற்ற அரசு உத்தரவு நகலை எடுத்து வந்து காவல்துறையினரிடம் காட்டினர்.
 
அந்த உத்தரவு நகலை பார்த்த போலீசார் இந்து முன்னணி கொடிக்கம்பத்தை அகற்றும் பணியை கைவிடுவதாக கூறினார். அதனை தொடர்ந்து கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் செங்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிகுந்த பரபரப்புக்கு இடையில் இந்து முன்னணியினர் தாலுகாஅலுவலகம் எதிரே இருந்த கொடிக்க ம்பத்தி லும் இந்து முன்னணி கொடியேற்றினர். முடிவில் செங்கோட்டை நகர தலைவர் வர்மா தங்கராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory