» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சை வேதிக் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

சனி 13, ஜனவரி 2018 12:56:38 PM (IST)தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய தினமான தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் புத்தம்புது பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். 

விழாவிற்கு பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் மற்றும் இயக்குநர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மைந்தன் நகைச்சுவை மன்னர்கள் நெல்லை சிவா, முத்துக்காளை, புலிபாண்டி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மாநில துணைத்தலைவர் கணேசராஜா ஆகியோர் நகைச்சுவைப் பொங்கல் பொங்க பள்ளிக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ மாணவியர்களின் நடன நாடகம் மற்றும் பொங்கல் கொண்டாடுவதன் நோக்கம், உழவர்களின் மேன்மை போன்றவை மேடையேறி அசத்தினர். சிறப்பு விருந்தினர்கள் கூறுகையில் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் அரங்கேற்றம் அனைவரையும் கவரத்தக்கதாக உள்ளது. 

இவர்களுக்கு எதிர்காலங்களில் பல துறைகளில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றும் இன்றைய மாணவ மாணவியர்கள் பல அறிவியல் முன்னே ற்றத்திற்கேற்ப பயனுள்ளதாக உள்ளது அதனை தக்க முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைதல் வேண்டும் என்றார். அதனைத்தொ டர்ந்து இன்றைய மாணவர்கள் விவசாய நிலத்தினை எவ்வாறு காத்திட வேண்டும், நேர்த்தியான முறையில் எப்படி என்ற வழிமுறைகளை நம் கண் முன்னே கொண்டு வந்து விளக்கி காண்பித்தது சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கி ணைப்பாளர் முருகேஸ்வரி, ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory