» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆரியங்காவு – எடமண் அகல ரயில் பாதை பணிகள் : பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சனி 13, ஜனவரி 2018 1:59:14 PM (IST)

தமிழகத்திலிருந்து கேரளாவை இணைக்கும் நியூ ஆரியங்காவு – எடமண் இடையே நடைபெற்று நிறைவு பெற்றுள்ள அகல ரயில் பாதை மற்றும் பல்வேறு பணிகளை தென்னக ரயில்வேயின் பாதகாப்பு ஆணையர் மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்திலிருந்து கேரளாவை இணைக்கும் செங்கோட்டை – புனலூர் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நியூ அரியங்காவு முதல் எடமண் வரையில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் புதியகுகை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. 

அதனை தொடர்ந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இறுதியாக 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூ ஆரியங்காவு முதல் எடமண் வரை அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் ரயில் பாதைகளின் தரம், சிக்னல்கள் ஆகியவற்றை தென்னக ரயில்வேயின்  பாதுகாப்பு ஆணையர் மனோகரன் டிராலி மூலம் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மேலும் ரயில் நிலைய கட்டிடங்கள், பயணிகளுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து இன்று அந்த பகுதியில் ரயிலை வேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் விரைவில் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory