» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சனி 13, ஜனவரி 2018 5:41:28 PM (IST)அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு வட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது அலுவலக வளாகத்தில் கரும்பு, மஞ்சள் இலை மற்றும் பொங்கல் பொருட்களுடன்  பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.இந்நிழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பார்கவி தங்கம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பூதத்தான், கூடுதல் துணை வட்டாட்சியர் முருகுசெல்வி, தேர்தல் துணை வட்டாட்சியர் வெற்றிச்செல்வி, தலைமை நில அளவையர் ஸ்டீபன், குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் ஹபிபுர்ரஹ்மான் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory