» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடையநல்லுார் ஐடிஐ மாணவர் கொலை வழக்கு : 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சனி 13, ஜனவரி 2018 6:23:58 PM (IST)
கடையநல்லுார் ஐடிஐ மாணவர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மேலக்கடையநல்லூரை சேர்ந்த செல்லத்துரை, கோபி ஆகிய இருவரும் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைக்க இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா அங்கு சென்று அந்த வாலிபர்களிடம் விசாரித்த போது 6 பேர் கும்பல் தங்களையும், முருகனையும் கடையநல்லூர் பெரிய குளம் பகுதியில் வைத்து அரிவாளால் வெட்டியதாகவும், தாங்கள் தப்பி வந்து விட்டதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். முருகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடைய நல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த முருகன் அந்த வழியாக மோட்டார் பைக்குகளில் வேகமாக சென்ற மணிகண்டன், முத்து, தங்கப்பாண்டி, பெரியசாமி, முத்து உள்ளிட்ட 6 பேரை முருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் கோபி, செல்லத்துரை ஆகியோர் தட்டிக்கேட்க இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
ஆத்திரம் தீராத மணிகண்டன் உள்பட 6 பேரும் சம்பவத்தன்று இரவு அரிவாளுடன் மேலக்கடையநல்லூர் பெரியகுளம் அருகே வந்த போது அங்கு முருகன், கோபி, செல்லத்துரை பேசிகொண்டு இருப்பதை கவனித்த கும்பல் அவர்களை அரிவாளால் வெட்ட முயல அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட 3 பேரையும் மணிகண்டன் உள்ளிட்டோர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில் செல்லத்துரை, கோபி ஆகிய இருவரும் வெட்டுக் காயங்களுடன் தப்பினர்.முருகன் மட்டும் கும்பலிடம் சிக்கி கொலையானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மணிகண்டன், பெரியசாமி, முத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக பணிகள் : மாவட்டஆட்சியர் ஆய்வு
வியாழன் 19, ஏப்ரல் 2018 6:33:02 PM (IST)

திமுக வினர் எச்.ராஜா படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 6:14:51 PM (IST)

மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் : சுரண்டையில் பரபரப்பு
வியாழன் 19, ஏப்ரல் 2018 5:42:37 PM (IST)

நெல்லையில் அம்மன் கோவிலில் பணம் கொள்ளை
வியாழன் 19, ஏப்ரல் 2018 2:05:16 PM (IST)

தென்காசியில் எச்.ராஜா படத்தை கொளுத்திய திமுக
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:12:24 PM (IST)

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு மிக கடினம் : பாடத்தில் இல்லாத கேள்வி வந்துள்ளது
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:03:12 PM (IST)
