» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல்விழா

சனி 13, ஜனவரி 2018 6:28:23 PM (IST)தென்காசி அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் தென்காசி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டா முத்தையா தலைமை வகித்தார்.உறைவிட மருத்துவஅலுவலர் டாக்டர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். பொங்கல் பொங்கப்பட்டு மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழி யர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் டாக்டர்கள் ஸ்ரீமணிகண்டன், ராமநாதன், முத்துக்குமாரசுவாமி, ரஜினிகாந்த், இம்ரான், புரோஸ்கான், ஏஆர்டி மைய சிறப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், ஏஆர்டி மைய மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலெட்சுமி, நம்பிக்கை மைய ஆலோசகர் விஜயலெட்சுமி, தமிழ்செல்வன், ரத்த வங்கி அலுவலர் நாகராஜன், மருத்துவமனை செவிலியர் கண்கா ணிப்பாளர்கள் சாரதா, போர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory