» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூய செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:30:32 AM (IST)கொட்டாக்குளம் தூய செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

செங்கோட்டையை அடுத்துள்ள கொட்டாக்குளம் தூய செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் செங்கோட்டை பங்கு தந்தை பிளேஸ் அடிகளார் தலைமைதாங்கி கொடியேற்றி வைத்தார். வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் முன்னிலைவகித்தார். அதனைதொடர்ந்து 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதிகளில் வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் நாள்தோறும் பாடல் மற்றும் மாறுவேடப்போட்டி, உறவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், கல்விநிகழ்ச்சிகள், மற்றும் சிறப்பு திருப்பலிகள் நற்கருணை,ஆடம்பரத் திருப்பலி, மறையுரை சிந்தனைகள் நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்வாக 19ஆம் தேதி வெய்கால்பட்டி பங்குத்தந்தை லியோ தலைமையில் தூய செபஸ்தியார் திருவுருவ பவனியும், 20ஆம் தேதியில் பாளையங்கோட்டை ஆயர் இல்ல பங்குத்தந்தை ராபின் தலைமையிலும், 21ஆம் தேதியில் பாளையங்கோட்டை ஆயர் இல்ல பங்குத்தந்தை சாக்கோவர்க்கீஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி, புதுநன்மை, நற்கருணை ஆசீர் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், ஊர் பொறுப்பாளர்கள், அன்பியங்கள், இறைமக்கள், பக்த சபையினர் சார்பில் செய்து வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory