» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழகத்தில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி : கீ.விரமணி குற்றச்சாட்டு

வியாழன் 18, ஜனவரி 2018 6:01:15 PM (IST)

தமிழகத்திற்குள் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி நடப்பதாக திக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.

நெல்லையில் திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி, அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மண்டல் கமிஷன் பரிந்துரைந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறை ப்படுத்தக் கோரி அப்போதைய ஜெ.ஆட்சி காலத்திலும், தற்போதைய அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்சாதி இல்லாத நாடு மூடபழக்கங்களை மக்களிடம் விதைக்கும் சாமியார்கள் இல்லாத நாட்டை அமைக்க திக முயன்று வருகிறது. 

தமிழகத்திற்குள் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி நடக்கிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க முன் வர வேண்டும். இல்லையெனில் அதற்காக போராட்டம் நடத்தப்படும் சென்னையில் ஒருமித்த கருத்து கொண்ட அமைப்புகளுடன் இணைந்து மதவெறி மற்றும் கருத்துரிமை பாதகாப்பு மாநாட்டை நடத்த உள்ளோம் இதுவே திகவின் மைய பிரச்சாரமாக அமையும் என்றார்.


மக்கள் கருத்து

சாமிJan 19, 2018 - 11:12:12 AM | Posted IP 59.93*****

செத்துப்போன கொள்கைகளுக்கு சொந்தம் கொண்டாடும் கூட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory