» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடுத்து வரும் யுத்தத்தில் பாகிஸ்தான் இருக்காது : சுப்பிரமணியசுவாமி எம்.பி., ஆரூடம்

திங்கள் 5, பிப்ரவரி 2018 10:16:01 AM (IST)அடுத்த யுத்தத்தில் பாகிஸ்தான் நாடு இருக்காது என தென்காசியில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியசுவாமி எம்.பி., பேசினார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஹிந்து ஆலய விழிப்புணர்வு முதலாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு துரைதம்புராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ஆறுமுகச்சாமி, பா.ஜ.க.,மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன், பி.எம்.எஸ்.மாவட்ட பொருளாளர் பாடாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தர் ஆசிரமம் சவாமி அகிலானந்த மகாராஜ் ஆகியுரை வழங்கினார். 

மாநாட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி எம்.பி., சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- இந்தியா 100 சதவீதம் இந்து நாடாக இருந்தது. பல நாடுகளில் இஸ்லாமியர்கள் நுழைந்து அநீதி இழைத்தனர். இந்தியாவில் எவ்வளவு மதமாற்ற அநீதிகள் நடந்தாலும் இப்போது 80 சதவீத இந்துக்கள் உள்ளனர். இங்குள்ள இஸ்லாமியர்களி;ல் 95 சதவீதம் பேர் அமைதியாக இருக்கவே விரும்புகின்றனர். வெளிநாடுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் இந்தியா வளர்ந்து விட கூடாது என்பதற்காக கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் நீண்ட நாள் இருக்க போவதில்லை. பா.ஜ.க அடுத்த பொதுத்தேர்தலிலும் ஆட்சி அமைக்கும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் அது தற்காலிக வெற்றிதான். இறுதியில் நரேந்திரமோடிதான் வெற்றி பெறுவார். அவர் தலைமையிலான ஆட்சியே மத்தியில் உள்ளது.அடுத்த யுத்தத்தில் புலுசிஸ்தான், சிந்து, மேற்கு பஞ்சாப், என நான்காக பிரிக்கும் போது பாகிஸ்தான் இருக்காது. இந்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்படும். ஏப்ரல் மாதத்தில் அதற்குரிய வாதங்கள் முடிவடையும் என்று நம்புகிறேன். அடுத்த தீபாவளி அயோத்தியில் கொண்டாடுவோம்.

இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். தலாக் சொல்லிவிட்டு பெண்களை அனுப்பி விடலாம். இதுபோன்று பெண்களை அவமானபடுத்துவதை பொருத்து கொள்ள முடியாது. எந்த மதத்திலும் பெண்களுக்கான உரிமை கிடைக்க பெறாவிட்டால் அதை பெற்று தருவது எங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் வி.எச்.எஸ்.மாநில தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்திரலேகா, வி.எச்.பி.மாநில செயலாளர் ராஜாமாணிக்கம், இந்திய ரயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி, இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு தலைவர் குற்றாலநாதன், தென்காசி நகர பா.ஜ.க., செயலளார் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் செங்கோட்டை நகர பா.ஜ.க.செயலாளர் வாசன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory