» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேசியக் கொடி எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக‌ மாற்றுத்திறனாளி வாலிபர் கைது

வெள்ளி 9, பிப்ரவரி 2018 12:36:42 PM (IST)

திசையன்விளையில் ஏ.டி.எம் முன்பு இருந்த‌ தேசியக் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தில் இட்டமொழியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவ்ட்டம் திசையன்விளையில் பொதுத்துறை வங்கி ஏடிஎம் முன்பு இருந்த தேசிய கொடி நேற்று இரவு எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார் இது தொடர்பாக போலீசார் இட்டமொழியை சேர்ந்த நெல்சன் (35) என்பவரை கைது செய்தன‌ர். அவரிடம், தேசிய கொடி எரித்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

நெல்சன், பிளஸ் 2 முடித்துவிட்டு, கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றுள்ளார். பொதுச் சேவையில் விருப்பமுள்ள இவர், பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இவரது சேவையை பாராட்டி மாநிலஅரசு 2005ல் விருது வழங்கியது. மத்திய அரசு 20011ல் தேசிய இளைஞர்நல விருது வழங்கி கவுரவித்துள்ளது. நெல்சன் தற்போது மனநலம் பாதித்து இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory