» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உயரதிகாரிகள் டார்ச்சரால் அரசு ஊழியர் தற்கொலை திருநெல்வேலியில் பரபரப்பு சம்பவம்

சனி 10, பிப்ரவரி 2018 10:13:49 AM (IST)

திருநெல்வேலியில் உயரதிகாரிகள் டார்ச்சரால் நில அளவைத் துறை வரைவாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அளவைத் துறையில் வரை வாளராகப் பணியாற்றி வருபவர் முத்துமாலை (39) இவர் நேற்று பணிக்கு வந்திருந்த போது அதிகாரி கள் டார்ச்சர் கொடுத்ததாகத் தெரி கிறது. இதனையடுத்து பணி முடிந்து வீடு திரும்பிய முத்துமாலை மிகுந்த சோர்வுடன் இருந்தாராம்.

இன்று காலை பாளையங்கோட்டை தெற்குபாஜார் திருவடி தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory