» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பக்கோடா விற்று பட்டதாரிகள் நூதன போராட்டம்: காங்கிரஸ் கட்சியினரால் நெல்லையில் பரபரப்பு

சனி 10, பிப்ரவரி 2018 11:19:24 AM (IST)திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் பட்டதாரிகள் பிரிவு சார்பில் மோடி பக்கோடா விற்பனை செய்யும் நூதன போராட்டம் நடைபெற்றது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பொழுது,  பக்கோடா விற்பது என்பதும் ஒரு வேலை வாய்ப்புதான், பக்கோடா விற்பனை செய்யும் நபர் தன் வீட்டிற்கு ரூ.200-ஐ வருமானமாகக் கொண்டு சென்றால், அதனை நாம் வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா? இல்லையா? என்று கருத்து தெரிவித்திருந்தார்.பிரதமர் மோடியின் இந்த கருத்து பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்வினைகளை உண்டாக்கியது. 

பெங்களுருவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா அரங்கம் அருகே பட்டதாரிகள் பக்கோடா விற்பனை செய்து பரபரப்பினை ஏற்படுத்தியது. தொடர்ந்து காங்கிரசார் பல்வேறு பகுதிகளிலும் பக்கோடா விற்று தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர காங்கிரஸ் பட்டாதாரிகள் சார்பில்  மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் "மோடி பக்கோடா" விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory