» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிரிக்கெட் பந்துவீச்சில் புதிய உலக சாதனை முயற்சி : திருநெல்வேலி கல்லுாரி மாணவர் அசத்தல்

திங்கள் 12, பிப்ரவரி 2018 12:09:20 PM (IST)பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கிரிக்கெட் பந்துவீச்சில் மாணவர் உலகசாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு பயிலும் மாணவர் செந்தில்வேல்குமார் இடதுகையைப் பின்னால் கட்டிக்கொண்டு வலதுகையால் தொடர்ந்து 10 மணிநேரம் கிரிக்கெட் பந்து வீசும் உலக சாதனை நிகழ்வை 12.2.2018  திங்கட்கிழமை காலை 7.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வித்துறை நடத்துகிறது. 

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி நிகழ்வில் கலந்துகொண்டு மாணவரை வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் முகமது சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ். கே.ஏ. மீரான் முகைதீன் மற்றும் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசேன் ஆகியோர் கிரிக்கெட் பந்தை மாணவர் செந்தில் வேல் குமாருக்கு தந்து உலக சாதனை நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்வை உலகசாதனையாக பதிவுசெய்ய ரமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொடங்கிவைத்த வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் ( WILL MEDAL OF WORLD RECORDS ) எனும் அமைப்பின் தலைவர் கலைவாணி மற்றும் நிகழ்வின் ஆய்வாளரும் அவ்வமைப்பின் இணைச்செயலாளருமான சீனி மீரான், அவ்வமைப்பின் செயலாளர் தஹ்மிதா பானு ஆகியோர் ஆய்வு செய்தனர். விளையாட்டுத் துறைப் புல முதன்மையர் பேரா.  அப்துல் காதர், உடற்கல்வித் துறை இயக்குநர் செய்யதலி ஆகியோர் வரவேற்றுப் பேசினர். 

அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர்  அப்துல் காதர், கருவூலக் காப்பாளர் அப்துல் கரீம், வரலாற்றுத் துறைத் தலைவர் நஸீர் அகமது, மாணவர் பேரவைப் பொறுப்பாளர்  ஹாமில், தமிழ்த்துறைத் தலைவர்  மகாதேவன், ஆங்கிலத் துறைத் தலைவர்  முஹம்மது ஹனீப், இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர்அயூப்கான், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஷேக் சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் எனும் அமைப்பு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்கு  வருகை தந்து மாணவர் செந்தில்வேல்குமாரின் சாதனையை உலகசாதனையாகப் பதிவுசெய்து சான்றிதழ் வழங்க உள்ளது. கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், அலுவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த உலகசாதனை நிகழ்ச்சியை மாணவர் பேரவை மற்றும் ஏசர் இந்தியா லிமிட்டட் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. கல்லூரி முதல்வர் முகமது சாதிக், மாணவர்  செந்தில்வேல்குமாருக்குக் கல்லூரி சார்பில் பணப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory