» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 11:24:15 AM (IST)

தென்காசி அருகே 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது நிறைவடையாத சிறுமி என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் திட்டமிட்டனர்.இந்த விபரம் நெல்லை மாவட்ட குழந்தை திருமணம் தடுப்பு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா தலைமையில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த், குழந்தை கடத்தல் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிலோமினாள், வரதட்சணை தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவிக்கு விருப்பம் இல்லாமல் திருமண ஏற்பாடு நடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவியின் திருமணத்தை நிறுத்தும் படி இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் கூறினர். அதன் பிறகும் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டினர் முயற்சி செய்து வந்தனர்.இதைத்தொடர்ந்து சமூக நல அலுவலர் இந்திரா செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், விருப்பம் இல்லாத மாணவியின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அவசர வழக்காக எடுத்து இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி நிலமேஸ்வரன், மாணவியின் திருமணத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவு நகலுடன் சமூக நல அலுவலர் இந்திரா தலைமையில் அதிகாரிகள் குழு அந்த கிராமத்திற்கு நேற்று சென்றது.

அங்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் அதிகாரிகள் குழு மாணவியின் பெற்றோரிடம் விபரத்தை கூறினர். பின்னர் நீதிமன்றம் உத்தரவு நகலை காண்பித்து மகளின் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கூறினர். இதைத்தொடர்ந்து நடைபெற இருந்த மாணவியின் திருமணம் நிறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory