» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விளையாட்டில் சாதித்த மாற்றுத்திறளானி மாணவி : துாத்துக்குடி ஆட்சியருடன் சந்திப்பு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 2:22:11 PM (IST)



மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்தி றனாளி மாணவி முத்துமினா மாவட்டஆட்சியர் வெங்கடேசை நேரில் சந்தித்து பாராட்டு நற்சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

மதுரை மாநகரில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 26.1.2018 முதல் 28.1.2018 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம், சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி முத்துமினா கலந்து கொண்டு, குண்டு எறிதலில் முதல் பரிசும், ஈட்டி எறிதலில் இரண்டாம் பரிசும் பெற்றார். மாவட்ட நிர்வாகம் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், (12.2.2018) அன்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் , நேரில் சந்தித்து பாராட்டு நற்சான்றிதழ்களும், கேடயங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார். 

பின்னர் மாவட்டஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டம், சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி முத்துமினா மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதைப்போல் மாற்றுத்திறனாளிகள் தாமாக முன்வந்து போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் மார்ச்மாதம் சண்டிகர் மாநிலத்தில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள முத்துமினா வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது, சார் ஆட்சியர் பிரசாந்த் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

சங்கர்Feb 13, 2018 - 04:39:35 PM | Posted IP 61.2.*****

வாழ்த்துக்கள் ஆட்சியருக்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory