» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 5:20:55 PM (IST)தென்காசி ஒன்றியம் பாட்டாக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

தென்காசி  ஒன்றியம் பாட்டாக்குறிச்சி அதிமுக செயலாளர் பூல்பாண்டியன், தேமுதிக செயலாளர் செல்லப்பா, புதிய தமிழகம் கட்சியின் செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் இசக்கி, முத்துமாரி, கருப்பசாமி, வேல்சாமி, பசுபதி, சிதம்பரம், முருகன் உட்பட 25 பேர் நெல்லை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில்  திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கிப்பாண்டியன், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory